Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை – 1,156, செங்கல்பட்டு – 135, திருவள்ளூர் – 55, காஞ்சிபுரம் – 16, தூத்துக்குடி – 14 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 44 அரசு மற்றும் 32 தனியார் மையங்கள் என மொத்தம் 76 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று மட்டும் 16,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 5,72,970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |