Categories
மாநில செய்திகள்

SHOCKING: 160 செவிலியர்கள் பணி இடைநீக்கம்…. அதிர்ச்சி…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் மருத்துவர்கள் பணி இன்றியமையாதது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். அதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பணி எண்ணிலடங்காதது.

இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவுகளில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 90 செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு மனுவை அளித்தனர். இதனைப் போல காஞ்சிபுரத்தில் 70 துணை செவிலியர்கள் திடீரென நீக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Categories

Tech |