சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நேற்று இரவு சித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மிகவும் கலகலப்பாக இருப்பது போன்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். கடைசியாக அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அவரின் மறைவு திரை உலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த அவரின் மறைவிற்கு மக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அறைக்கதவை திறந்து பார்த்தபோது புடவையால் மின்விசிறியில் தூக்கு மாட்டியது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் முகத்தில் நகக்கீறல்கள் போன்ற காயங்கள் இருப்பதால் சந்தேகம் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் உண்மை தெரியவரும்.