தமிழகத்தில் அதிர்ச்சி தரும் வகையில் மின் கட்டணம் மறைமுகமாக பல மடங்கு உயர்ந்துள்ளதால் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசமும் 20 நாட்களுக்கு பதிலாக ஏழு நாட்களே கொடுக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
கொரோனா நிதி நெருக்கடி காலத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. அரசு இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஒரு சிலருக்கு இது போன்று பல மடங்கு கட்டண உயர்வு வந்துள்ளதால் உங்களுக்கும் இது போன்ற நிலை ஏற்பட்டிருந்தால் 9498794987 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரை தெரிவித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.