இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
பட்ஜெட்டில் உஜ்வாலா திட்டத்தில் ஏற்கனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் ஒரு கோடி பேர் சேர்க்கப்படுவார்கள் என அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் உஜ்வாலா திட்டத்திற்கு பெருமளவு தொகையை மத்திய அரசு பயன்படுத்த முடிவு செய்திருப்பதால், கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.