இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், முக கவசம் அணியாமல் சென்ற பெண் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான அந்த பெண்ணின் உடையை கழற்றி புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து பெண் அளித்த புகாரின் பேரில் அந்தப் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.