பிரான்சில் எரிவாயு கட்டணம் அதிகரிக்க உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரான்ஸில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியுடன் உள்ளனர். இருப்பினும் அவர்களது அன்றாட வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் எரிவாயு கட்டணம் விலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவிற்கு 1.5 சதவீதமும்,சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு 3.4 சதவீதமும், சமையல், வெந்நீர் மற்றும் வெப்பமூட்டிக்காக பயன்படுத்தும் எரிவாயுவிற்கு 5.9 சதவீதமும் கட்டணம் அதிகரிக்க உள்ளது. குளிர் காலத்தின் தேவை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.