Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் பயங்கர குண்டு வெடிப்பு…. 2 பேர் பலி…. பரபரப்பு….!!!!!

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிபூர் பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னா வீட்டில் திடீரென பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வரின் மருமருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் ஊர்வலம் நடைபெற இருந்தது. இந்த ஊர்வலம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |