வீடியோ அழைப்பு மூலம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், ஆபாச படத்தை ஹேக்கர் திணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அரசின் முக்கிய உரையாடல்கள் வீடியோ கால் மூலமாக தான் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சபாநாயகர் தாண்டி மோடிஸ் (Thandi Modise) தலைமையில் ஜூம் (Zoom ) வீடியோ கால் மூலமாக நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனாவின் தாக்கம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களுடன் சுவாரஸ்யமாக நடந்து கொண்டியிருந்தது கூட்டம் . அப்போது, வீடியோ காலின் நடுவே ஹேக்கர்கள் ஆபாச படத்தை திணித்தனர். இதைப் பார்த்த உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கூட்டமும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மற்றொரு (link ) லிங்கில் நாடாளுமன்றக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
ஜூம் (zoom ) செயலியில் ஹேக்கர் தொல்லை இருப்பதாக இந்தியா ஏற்கெனவே எச்சரித்து இருந்தது . எனவே அரசு உரையாடல்களுக்கு ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.