Categories
மாநில செய்திகள்

ஷாக்!… தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். அதன் பிறகு சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 100 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மட்டும்தான் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சரிபார்க்கப்படுகிறது. அப்படி சரிபார்த்ததில் 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டினை போக்குவதற்கு இனிப்பான மருந்து கொடுக்கப்பட இருக்கிறது. இந்த மருந்து கொடுத்து 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு சரிபார்க்கப்படும். மேலும் கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே ஆரோக்கியம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு 3 கிலோ எடை வரை குழந்தைகளை பெற்றெடுத்தாலே ஊட்டச்சத்து குறைபாடு வராது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |