Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக் நியூஸ்… சமந்தா நாகசைதன்யா திடீர் விவாகரத்து… அவர்களே வெளியிட்ட அறிக்கை…!!!

சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விவாகரத்து செய்ய போகும் தகவல் உறுதியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்துதிருமணம் செய்து கொண்டார்.

சமீபகாலமாக நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி செய்தி வந்துகொண்டே இருந்தன. ஆனால் இது பற்றி சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் எந்த தகவலும் வெளியிடவில்லை. இதற்கிடையில், நாகசைதன்யா மற்றும் சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள போவதாக மற்றொரு தகவலும் பரவ தொடங்கியது.

இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள போகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இத்தகவலை அவர்களே தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |