நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தடையை நீட்டித்து உள்ளது. இது குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு வழி இல்லாத வங்கிகள், இப்போதைய மூலதனம் இல்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் மட்டும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த தடை கடந்த மே 19ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தடையை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்திலுள்ள டெக்கான் நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். இந்த கட்டுப்பாடு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் இந்த வங்கி புதிதாக கடன்களை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கடன்களை புதுப்பிக்கவும் தடைவிதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய டெபாசிட்களை வங்கி எடுப்பதற்கும் தடை விதித்தும், புதிதாக முதலீடு செய்யவும் ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.