கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிவிரைவில் பால் விலை மீண்டும் உயர்த்த படும் என்று அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆற்றல் செலவுகள், லாஜிஸ்டிக் செலவுகள்,பேக்கேஜ் செலவுகள் போன்றவை அதிகரித்துள்ளதால் பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பால் விலை 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
Categories
Shock News: மீண்டும் பால் விலை அதிரடி உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
