நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் கார்டு மூலமாக பயனாளிகளுக்கு இலவசமாகவும், மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணம். அதுமட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனால் தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் அங்கு உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். இந்நிலையில் இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதிலும் குறிப்பாக தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஏனென்றால் தகுதியற்ற பல ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி அவற்றை கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்கின்றனர்.
அதனால் உதவி தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போய்விடுகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தகுதியற்ற பயனாளிகள் தங்களது ரேஷன் கார்டுகள் அனைத்தையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ரேஷன் கார்டை ஒப்படைக்காமல் இருந்தால் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கு அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் பலன்கள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக 18 வயதை தாண்டியவர் ஆக இருக்க வேண்டும். அதற்கான விதிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், 100 சதுர அடிக்கு மேல் புக்கா வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், வீட்டிலேயே சி மற்றும் ஜெனரேட்டர் வைத்து இருப்பவர்கள், 80 சதுர அடிக்கு மேல் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆலை வைத்திருப்பவர்கள்,குடும்ப வருமானம் ஆண்டுக்கு மூன்று லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் மற்றும் ஆயுத உரிமம் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களது ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தகுதியற்ற பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.