Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: பெட்ரோல், டீசல் விலை: ரூ.6 வரை உயர்த்த முடிவு…. வெளியான தகவல்…!!!!

சென்னையில் 128 வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40, டீசல் ஒரு லிட்டர் ரூ.91.43- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்தது. தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம்.

தற்போது உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என பரபரப்பு தகவல் வெளியானது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தின. இதில் பெட்ரோல், டீசல் விலையை 5 முதல் 6 வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஒரேயடியாக விலையை உயர்த்தாமல் தினமும் 50 காசுகள் என்று அளவில் படிப்படியாக உயர்த்தலாம் என்று தெரிகிறது.

Categories

Tech |