Categories
கல்வி மாநில செய்திகள்

SHOCK NEWS: தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேமாதம் சம்பளம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக பலர் பணிபுரிந்து வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானதே எனவும் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பணி நிரவல் ஆணை பெற்ற உபரிபட்டதாரி ஆசிரியர்கள், அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. அதன்பின் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அதே பள்ளியில் பணிபுரிந்தால் முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தலைமை ஆசிரியர்களும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |