Categories
அரசியல்

SHOCK NEWS: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அதிர்ச்சி…. வெளியான திடீர் அவசர அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதத்தை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது. அதனால் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு இஎம்ஐ அதிகரிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி அடிப்படை வட்டி விகிதம் 7.10 விழுக்காட்டிலிருந்து 7.20 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இந்த புதிய வட்டி விகிதம் மே 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கியில் கடன் செலுத்துவோருக்கான EMI தொகை மேலும் அதிகரிக்கும். அதனால் இஎம்ஐ செலுத்துவோர் இனி வரும் மாதங்களில் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் வீட்டுக் கடன், பர்சனல் லோன் மற்றும் வாகன கடன் போன்ற கடன்களை வாங்கியோருக்கு EMI பல மடங்கு உயரும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக கடன் வாங்குவோர் இரு தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுவர்.

கடந்த இரண்டு வருடங்களாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்திய ரெப்போ வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தியது. உலகம் முழுவதும் பணவீக்கம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனை சமாளிக்க பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் வருகின்றது. அந்த வரிசையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி உயர்த்தியுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம் ஆகும். இது உயர்த்தப்படும் போது கடன்களுக்கான EMI உயரும். அதனைப்போலவே பிக்ஸட் டெபாசிட் வட்டி வீதமும் உயரும். எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |