Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. மினிமம் பேலன்ஸ்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்குதல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமல்லாமல் பல்வேறுபட்ட நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதுபற்றி பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான கட்டணமும் உயர்த்தப்படுகிறது.

மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காததற்கான கட்டணம் கிராமப்புற பகுதிகளுக்கு ஒரு காலாண்டுக்கு 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நகர்புறங்களை பொறுத்தவரை மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான கட்டணம் ஒரு காலாண்டுக்கு 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தவிர லாக்கருக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. எல்லா கட்டண உயர்வும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. மெட்ரோ நகரங்களில் காலாண்டு சராசரி பேலன்ஸ் பராமரிக்காததற்கான கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகரங்களில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான கட்டணம் ஒரு காலாண்டுக்கு 600 ரூபாயாகவும், கிராமப்புறங்களுக்கு 400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நகரங்களில் லாக்கருக்கான கட்டணம் 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இனி ஒரு ஆண்டுக்கு லாக்கரை 12 முறை மட்டுமே பார்க்க முடியும். இதற்கு முன் ஒரு ஆண்டுக்கு 15 முறை பார்க்க முடிந்தது. ஒரு விசிட்டுக்கான கட்டணம் 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு 11 நாட்களுக்குப் பின்னர் மூடப்படும் அதற்கான அபராதம் 600 ரூபாயிலிருந்து 700 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 12 மாதத்தைத் தாண்டிய பின்னர் மூடப்படும் நடப்பு கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |