Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ஆட்டோ, டாக்ஸி கட்டணம் அதிரடி உயர்வு?…. பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

டெல்லியில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி உரிமையாளர்கள் கட்டளை உயர்த்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொண்டால் டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணம் அதிரடியாக உயரும். டெல்லியில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணத்தை உயர்த்துவதற்கு டெல்லி அரசு கடந்த மாதம் ஒரு சிறப்பு குழுவை நியமித்தது.

அந்தக் குழு தற்போது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் கட்டணத்தை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. கட்டண திருத்த குழு பரிந்துரையில் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் மூன்று சக்கர வாகனங்களுக்கு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தவும் கட்சிகளின் கட்டணத்தை 60% வரை உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில்,சமையல் சிலிண்டர் விலை உயர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் தக்காளி மற்றும் இதர காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட டெல்லி சந்தையில் தற்போது அதிகரித்துள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதோடு சேர்த்து டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்கள் உயர உள்ளது. இதை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |