அமெரிக்காவில் கென்டகி பகுதியில் அடுத்தடுத்து சூறாவளி தாக்கியதில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் பறந்து விட்டன. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகலால் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆர்கன்சாஸ் மருத்துவமனையின் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
அமெரிக்காவில் பல மாகாணங்களில் சுழன்றடித்த சூறாவளி காற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. காவல் துறையினரும் மீட்பு படையினரும் மீட்பு பணியில் தீவிரமாக இறங்கி வருகின்றனர். சூறாவளி பாதிப்பால் விமானத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்த அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.