சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். திருவிக நகரை சேர்ந்த ஆண் (53), மேடவாக்கத்தை சேர்ந்த மூதாட்டி (60), வியாசர்பாடியை சேர்ந்த முதியவர் (70) உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கோரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 49 வயது ஆண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயது ஆண் என மொத்தம் 18 பேர் இன்று காலை நிலவரப்படி சென்னையில் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 641ஆக உயர்ந்துள்ளது.