ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் புங்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் திடீரென 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு 50 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில் கேஸ் லீக்கானதில் கேஸ் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் 12 பேருக்கு உடலில் அதிக அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களை முதல் மந்திரி அசோக் கெலாட் இன்று மாலை மருத்துவமனையில் சென்று நேரில் சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது.