டெல்லியில் குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகள் கடந்த சனிக்கிழமை மதிய வேளையில் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் என்னுடைய மகள் வீட்டிற்கு திரும்பாததால் நாங்கள் அவரை பல இடங்களில் தேடினோம்.
இரவு முழுதும் தேடியும் எங்களுடைய மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை வீட்டின் அருகே என்னுடைய மகள் அழுது கொண்டே இருந்தார். உடனே நாங்கள் சென்று அவளிடம் என்ன ஆனது என்று கேட்டோம். அப்போது தன்னுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் தன்னை இரு சக்கர வாகனத்தில் வைத்து ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு வைத்து 5 மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சொன்னாள்.
எனது மகளின் வாழ்க்கையை சீரழித்த 5 கொடூரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 5 பேரின் மீதும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை 5 மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.