நாட்டின் குடியரசு தின விழாவில் பலத்த தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐந்து பயங்கரவாதிகளை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடிப்பொருட்கள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் நைட்ரிட் ஆசிட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முஹம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
காவலர்கள் கைது செய்த பயங்கரவாதிகள் ஐந்து பேருக்கும் காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புள்ளது. கடந்தாண்டு நவம்பர் 26ஆம் தேதி காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அருகில் தாக்குதல் ஒன்று நடந்தது.

பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள்
இந்த தாக்குதலிலும் பயங்கரவாதிகளுக்கு தொடர்புள்ளது. காவலர்களால் கைது செய்யப்பட்டவர்களில் அசாஜ் அஹமது ஷேக், உமர் ஹாமித் ஷேக் ஆகியோர் ஓட்டுனர், நடைபாதை வியாபாரி ஆவர். சகில் பரூக் கோஸ்ரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நஸீர் மிர் தொழிலதிபராகவும், இம்தியாஷ் அகமது சிக்லா என்ற இம்ரான் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடையும் நடத்தி வருகின்றனர்.