கர்நாடகாவில் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாக வாரியங்களின் கர்நாடக சங்கம் அதன் உறுப்பினர் பள்ளிகளுக்கும் மாணவர்களின் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டது. அதன் பிறகு சில பள்ளி நிர்வாகங்கள் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், அனைத்து மாணவர்களின் பைகளும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது பள்ளி மாணவர்களின் பைகளில் கிடைத்த பொருட்களை பார்த்து அதிகாரிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது செல்போன் தவிர 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் சிகரெட், லைட்டர்கள், ஒயிட்னர்கள், வாய் வழி கருத்தடை சாதனங்கள், ஆணுறைகள் மற்றும் அதிக அளவிலான பணம் போன்றவைகள் இருந்துள்ளது. இதேபோன்று ஒரு மாணவியின் பையிலும் ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு பள்ளி நிர்வாகத்தின் முதல்வர் கூற, சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய போது அது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது எனவும், தன்னுடன் படிக்கும் தோழிகள் அல்லது டியூஷனில் தான் இது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் 80 சதவீத பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கே.எம்.எஸ் பொதுச் செயலாளர் டி. சசிகுமார் கூறியுள்ளார். அவர் ஒரு மாணவியின் பையில் வாய்வழி கருத்தடை சாதனங்கள் (ஐபிஎல்) மற்றும் தண்ணீர் பாட்டிலில் மதுபானம் கலந்து வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அபயா மருத்துவமணையின் மனநல மருத்துவர் ஏ.ஜெகதீஷ் சமீபத்தில் ஒரு தாய் தன்னுடைய 14 வயது மகனின் ஷூ ஸ்டோரேஜில் ஆணுறை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் மனம் விட்டு பேசினால் மட்டும்தான் மாணவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். அதோடு சில குழந்தைகள் இது போன்ற செயல்களில் ஈடுபட விரும்புவதாகவும், போதைப்பழக்கம் மற்றும் எதிர் பாலினத்தவர் உடனான உறவு போன்றவைகள் உடல் ரீதியான தொடர்புக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.