தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹயநத்நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது நிரம்பிய மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உட்பட 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். அதோடு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மாணவர்கள் மிரட்டியதால் மாணவி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் இன்னொரு மாணவருடன் மாணவியின் வீட்டுக்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்று மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இதனையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை வாட்ஸ் அப் குருப்பில் மாணவர்கள் பகிர்ந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறவே அவர்கள் 5 மாணவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.