தமிழ் சினிமாவில் வெளியான எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை, ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராதாகிருஷ்ணன் என்கிற ஆர் கே. 63 வயதாகும் இவருக்கு 53 வயதில் ராஜி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இதுனயடுத்து ராதாகிருஷ்ணன் நேற்று வெளியில் சென்றிருந்த நிலையில் இவரின் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் திடீரென வீட்டிற்குள் மூன்று பேர் நுழைந்துள்ளனர். இவரின் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர்.
இதனை தொடர்ந்து இவரின் பீரோவில் இருந்த 250 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இவர்கள் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ரமேஷ் தனது கூட்டாளிகளுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.