Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட…. 29 பேர் மரணம்…!!

பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிகளில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஆக்ஸ்போர்ட் மற்றும் பைசர் நிறுவனத்தின்  தடுப்பு மருந்துகள் 90 சதவீதம் வெற்றியடைந்ததை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பைசர்  தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தற்போது நார்வே நாட்டில் பைசர் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட 29 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்கள் அனைவருமே 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இதன் பக்க விளைவுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தடுப்பு மருந்து போடும் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |