நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் வருகின்ற ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த இரண்டு நாட்களில் எந்த தளர்வுகளும் அனுமதிக்கப்படாது என கூறியுள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 16,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3லட்சம் பரிசோதனைகள் செய்யவும் முடிவு செய்துள்ளது.