Categories
கிரிக்கெட் விளையாட்டு

Shock: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி….!!!!

இந்திய வீரரும் ஐபிஎல் பஞ்சாப் அணியின் கேப்டனுமான கே எல் ராகுல் குடல்வால் அலர்ஜி பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அவர் பூரண குணமடைந்த பிறகு மீண்டும் விளையாடத் தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு நேற்று திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு குடல்வால் அலர்ஜி இருப்பது சோதனையில் தெரிய வந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவருக்கு மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. அதன் காரணமாகவே அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் 7 போட்டிகளில் 331 ரன்கள் உடன் முதலிடம் வகிக்கிறார். ஆரஞ்சு தொப்பிக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர்.

Categories

Tech |