நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜெயம் ரவியின் சைரன் உள்ளிட்ட 4 திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும், அதற்குபின் வேறு எந்த புதுப்படங்களையு ஒப்பந்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர் திருமணம் செய்ய இருப்பதுதான் என்றும் பேச்சு அடிப்படுகிறது. நடிப்பில் இருந்து விலகி விரைவில் தயாரிப்பாளராக அவர் களமிறங்கலாம் என்றும் கூறப்படுகிறது.