இன்று முதல் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வங்கிகள் கிரெடிட் கார்டுகள் உடன் தொடர்புடைய பல்வேறு கட்டணங்களில் மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 10 இன்று முதல் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணம் 2.50% என அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.500 குறைந்தபட்ச கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனை போல்Auto-debit return கட்டணம் 2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.