அரண்மனைகளில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டில் பால்மோரல் அரண்மனை ஒன்று அமைந்துள்ளது. அந்த அரண்மனையில் பிரித்தானிய மகாராணியார், இளவரசர் ஆண்ட்ரூ உட்பட ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரண்மனையில் வேலை செய்யும் பணியாளர் ஒருவருக்கு கடந்த 14 ஆம் தேதி கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் அந்த பணியாளர் அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டதை தொடர்ந்து அரண்மனையின் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதி ஆகியவை மூடப்பட்டுள்ளது. மேலும் அரண்மனையில் வேலை செய்யும் மற்ற பணியாளர்கள் முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அரண்மனையில் வாழும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 95 வயதுடைய பிரித்தானிய மகாராணியார் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டாலும் அவரது பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அவரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.