பிக்பாஸ் ஷிவானி லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளம் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ 4 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மாடர்ன் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.