Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் உடையில் ஷிவானி நாராயணன்…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்…!!

நீச்சல் உடையில் ஷிவானி நாராயணன் எடுத்துள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதைத்தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்து இருந்தார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

அவரது திறமையான நடிப்பையும் அழகான புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்களின் மனதில் ஷிவானி நாராயணன் கனவு கன்னியாகவே இடம் பிடித்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சி முடிந்த பின் வழக்கம் போல் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. அதில் அவர் நீச்சல் உடை அணிந்து கொண்டு நீரில் நின்றபடி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CMo57f0H40Y/

Categories

Tech |