”குக் வித் கோமாளி” 3 புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
மேலும் தற்போது இவர் தமிழில் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ”குக் வித் கோமாளி” 3 சீசனில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் இவர் வடிவேலு கெட்டப்பில் வந்திருக்கிறார். இதற்கான புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.