Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிவனை பார்க்க குறுக்கு வழி…. பக்தருக்கு ஏற்பட்ட முடிவு… கதறிய உறவினர்கள்….

சிவாலய ஓட்டத்தில் சிவனைப் பார்க்க குறுக்கு வழியை தேர்ந்தெடுத்த சிவபக்தர் ரயில் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் கில்லியூரை  சேர்ந்தவர் சுதா கிருஷ்ணன். அதே பகுதியில் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவராத்திரியை முன்னிட்டு நடந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டார். திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயத்திற்கு சென்று விட்டு திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயத்திற்கு செல்வதற்காக சுதா கிருஷ்ணன் அதிகாலை தயாராகியுள்ளார்.  பள்ளியாடியில் இருக்கும் ரயில்வே தண்டவாளம் வழியாக சென்றால் வெகு விரைவில் சென்றுவிடலாம் என அவ்வழியாக சென்றுள்ளார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த ரயில் ஒன்று சுதா கிருஷ்ணன் மீது மோதியது. இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே ராதாகிருஷ்ணன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு  நாகர்கோவில் ரயில்வே காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுதா கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |