Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… 1200 வருடங்கள் பழமையான வணிகக்கப்பல் மீட்பு… அதில் என்ன இருந்தது?…

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கடற்கரை தொல்பொருள் ஆய்வாளர்கள் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கப்பலின் பாகங்களை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்து, துருக்கி, வட ஆப்பிரிக்கா, சைப்ரஸ் போன்ற மொத்த மத்திய தரைக்கடல் பகுதிகளில்  ஒரு வணிக கப்பலானது கி.பி ஏழாம் நூற்றாண்டில் வணிகம் செய்திருக்கிறது. அப்போது அந்த வணிக கப்பல் விபத்தில் சிக்கி கடலில் மூழ்கி போனது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கடற்கரையில் இந்த வணிகப்பலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள்.

அந்த வணிக கப்பலின் பாகங்களிலிருந்து சுமார் 200 ஜாடிகள் உட்பட பல கலைப் பொருட்கள் மீட்கப்பட்டிருக்கிறது. ஆழ் கடலில் நீந்தக்கூடியவர்களின் உதவியுடன் அதனை மீட்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் அன்றைய காலகட்டத்தில் எடுத்து செல்லப்பட்ட பல உணவு வகைகளும் தற்போது இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |