மும்பையில் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி கடந்த புதன்கிழமை இரவு 7:45 மணிக்கு தானே-பன்வெல் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் பெண்கள் பெட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஏறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருக்கைக்காக மற்றொரு பெண் பயணியிடம் வாக்குவதில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் 3 பேரில் ஒருவர் சக பயணியை முடியை பிடித்து அடித்துள்ளனர். இதனால் பெட்டியில் பயணித்த சக பயணிகள் சண்டையை நிறுத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த ரயில்வே காவலர் சமாதானம் செய்துள்ளனர்.
அதன் பிறகு மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஆரம்பித்துள்ளதுக்ஷ ஆளுக்கு நாள் மாறி மாறி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் இரு பயணிகளும் ரத்தம் வரும் அளவுக்கு காயம் ஏற்பட்டு ரயில் பெட்டியை களபரமானது. அதனை தொடர்ந்து ரயில் பிளாட்பாரத்துக்கு வந்தது முதலில் காயம் அடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கான் என்ற பெண் பயணி மீது வழக்கு பதிவு செய்து ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வீடியோவை எடுத்துள்ள சில பயணிகள் மும்பை ரயில்வே போலீசாரை டேக் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
Fight between two female passengers over a seat in Mumbai Local Train. #MumbaiLocal #Fight #ViralVideo #Mumbai pic.twitter.com/A7GiedIUvJ
— AH Siddiqui (@anwar0262) October 6, 2022