சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபிராமி (25). இந்தப் பெண் பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவர் உடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். தன்னுடய கள்ள காதலுக்கு இடையூறாக இருந்தால் தன்னுடைய 2 குழந்தைகளையும் அபிராமி கொன்றதோடு, கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அபிராமி தற்போது ஜெயிலில் இருக்கிறார்.
இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறப்பட்டாலும் தமிழகத்தில் கள்ளக்காதல் மற்றும் அதனால் ஏற்படும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு இடத்தில் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது என்று கூறவேண்டும். இந்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு அரங்கேறிய நிலையில், இதே போன்ற மற்றொரு கொடூர சம்பவம் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
அதாவது திண்டுக்கல் மாவட்டம் போடம்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான மாதேஷ் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ஞானமலர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஆதிரா என்ற 9 மாத பெண் குழந்தையும், பிரபாஸ் என்ற இரண்டரை வயது மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஞானமலருக்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயியான தங்கராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கணவர் இல்லாத நேரத்தில் அவரை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட மாதேஷ் மனைவியை கண்டித்ததுடன் இனியும் கள்ளக்காதல் தொடரக்கூடாது என எச்சரித்துள்ளார். இதனால் ஞானமலர் தன்னுடைய கள்ளக்காதனுடன் சேர்ந்து தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவனை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டியுள்ளார். அதன்பிறகு தன்னுடைய குழந்தைகள் இரண்டு பேருக்கும் எலி பேஸ்ட்டை கொடுத்ததுடன் தானும் விஷம் குடித்ததாக ஞானமலர் கூறியதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி குழந்தை ஆதிரா பரிதாபமாக உயிரிழக்க, ஞானமலர் விஷம் குடிக்க வில்லை என்பது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஞானமலரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்ததாக ஞானமலர் நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஞானமலர் மற்றும் தங்கராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் கள்ள காதலனுக்காக பத்து மாசம் சுமந்து பெற்ற இரண்டு குழந்தைகளை தாயார் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.