இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 150 மில்லியன் வருடங்கள் பழைமையான புதைப்படிவம் சுறாக்கள் குடும்பத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் சுமார் 150 மில்லியன் வருட பழமை வாய்ந்த புதைபடிவம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் கிம்மெரிட்ஜ் என்ற பகுதியில் எட்சஸ் கலெக்சன் மியூசியம் ஆஃப் ஜூராஸிக் மெரைன் லைஃப்ன் என்ற அருங்காட்சியகத்தில் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள், இது சுறாமீன் குடும்பத்தை சேர்ந்தது என்று கண்டுபிடித்துள்ளனர். அரிதான இந்த சுறாமீன் வகையானது, முழுவதுமாக அழிந்து விட்டது. இதன் பற்களை வைத்து இந்த வகையைச் சேர்ந்தது என்று கண்டுபிடித்துள்ளார்கள். புதைபடிவங்களில் அதிகப்படியாக சுறாவின் பற்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது சுறாவின் பற்கள் அடிக்கடி மாற்றமடையுமாம். சுமார் 361 மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவான இந்த புதைப்படிவமானது, சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக பூமியை ஒரு சிறிய கோள் தாக்கியதில் அழிந்துவிட்டது. இதனால் டைனோசர்களும், தாவரங்களும் அழிந்துள்ளது.
மேலும் மூன்றில் ஒரு பகுதி விலங்குகளும் அழிந்திருக்கிறது. யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 19 மில்லியன் வருடங்களுக்கு முன்பாகவே உலகில் சுமார் 70% சுறா மீன் வகை அழிந்து போனதாக கண்டுபிடித்துள்ளனர்.