Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது…

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் தன்னுடன் நெருங்கி பழகிய பெண் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரமடைந்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருகிலுள்ள பூதப்பாண்டி என்னும் பகுதியில் வசித்து வந்தவர் நவீன் இவர் அப்பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டி வந்தவர் இதனையடுத்து அவர் ஆட்டோ ஓட்டும் பகுதியில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி இவரது ஆட்டோவில் பயணம் செய்துள்ளார் .

இதனை எடுத்து இவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது இதனையடுத்து இருவரும்  நெருங்கி பழகிய நிலையில் புகைப்படங்கள் பல எடுத்துக் கொண்டனர் இதனை அடுத்து நவீன் வருமானப் பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார் இதனையடுத்து மீண்டும் தன் சொந்த ஊருக்கே திரும்பி வந்தபொழுது ,தன்னுடன் நெருங்கிப் பழகி வந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து கொண்டு நெருங்கிப் பழகியத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் 

இதனையடுத்து நவீன் ஆத்திரத்தில் அந்த பெண்ணுடன் எடுத்த ஆபாசமான புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினரிடம் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் நவீனை கைது செய்து உள்ளனர் மேலும் வலைதளத்தில் பரப்பப்பட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்

 

Categories

Tech |