Categories
அரசியல்

எல்லாரிடமும் சொல்லுங்க….. அவங்க செஞ்சதையும்….. நாம செய்ய போகிறதையும்….. ஸ்டாலின் வேண்டுகோள்….!!

மக்களிடமும் அதிமுகவின் ஊழல் பற்றியும் திமுகவின் சாதனைகள் பற்றியும் கூறுமாறு ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அமலிலிருந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நாடு முழுவதும் சினிமாத்துறை, கல்வித்துறை, தொழில்துறை உட்பட பல துறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. தளர்வுகளை தொடர்ந்து பல மாநிலங்களில் தேர்தல் பணிகளும் நடைபெற தொடங்கிவிட்டன.

அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாக தொடங்கிவிட்டன. தேர்தல் பிரச்சார பணிகள் ஆங்காங்கே அனல் பறக்க நடந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், ஆளுங்கட்சி கட்சி, எதிர்க்கட்சிகளையும், எதிர் கட்சிகள் ஆளும் கட்சியையும் மாறி மாறி குறை கூறிக்கொண்டு பிரச்சாரத்தை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்கள் அனைவரும் தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிட வேண்டும். மக்களிடம் அதிமுகவின் ஊழலைப் பற்றி எடுத்துச் சொல்லும் போது திமுக அரசு செய்த சாதனைகளைப் பற்றியும் இனி நாம் செய்யப் போகின்ற சாதனைகளையும் எடுத்துக் கூறுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |