சன்னி லியோனுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததால், அவரின் நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியதால் கடந்த சனிக்கிழமை அன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் புதுவை பழைய துறைமுகத்தின் வளாகத்தில் மூன்று தினங்களுக்கு இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது.
மேலும் அந்த இசை நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்வார் என்று வெளியான செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. எனவே கவர்ச்சி நடிகை சன்னி லியோனை வரவேற்கும் விதத்தில் அதிகமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் சன்னி லியோனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்கிவிட்டார்கள்.
டிக்கெட் விலை 2,500 ரூபாய் முதல் 5000 வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல சமூக அமைப்புகள் சன்னி லியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளை தெரிவித்தன. மேலும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் சன்னி லியோனுக்காக, வைக்கப்பட்டிருந்த பேனர்களை உடைத்தனர்.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் இசை நிகழ்ச்சி நடந்தது. ஆனால் அதில், சன்னிலியோன் கலந்து கொள்ளவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அவர் புதுவைக்கு வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு எதிரான போராட்டங்கள் நடந்ததால், அவரின் நடன நிகழ்ச்சி மட்டும் ரத்தானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சன்னி லியோன் அங்கிருந்து உடனடியாக சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சன்னி லியோனுகாக டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.