Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சிக்கலில் சிக்கிய ஷங்கர்…. தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்க தடை….!!!

தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்தை இயக்கி வந்தார்.ஆனால் கமல்ஹாசன் அரசியலில் பிசியாக இருந்ததன் காரணமாகும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றையும், பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கையும் இயக்க தயாரானார். ஆனால் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் ஷங்கர் இப்படத்தினை முடிக்காமல் வேறு படங்களையும் இயக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 பட தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆகையால் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்பட வர்த்தக சபையினர் ஷங்கருக்கு இத்தடையை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |