நடிகர் ஷாம் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஷாம். இவர் தளபதி விஜய் உடன் குஷி படத்தில் முதல் முதலில் நடித்திருந்தார். பின்னர் கதாநாயகனாக “12B” என்று படத்தில் அறிமுகமானார். மேலும் இவர் நடித்து வெளியான இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற திரைப்படங்களால் மேலும் பிரபலமானார். “பார்ட்டி” என்ற படத்தில் நடிகர் ஷாம் கடைசியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் உடற்பயிற்சியின் போது நடிகர் ஷாம் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூகவலைதளத்தில் ட்ரோல்ஸ் என மிகவும் பிரபலமாகி வருகிறது. நடிகர் ஷாம் நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஷாம் கிளீன் ஷேவ் செய்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து “உள்ளம் கேட்குமே” என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.