சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படம் ஆபாசம், டபுள் மீனிங் நிறைந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்,இந்த படத்தின் இரண்டம் பாகத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இதில் ஷாலு ஷம்முவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளத்தில் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.மேலும் இப்படத்தில் பிக்பாஸ் டேனியல், சாம்ஸ் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். படக்குழுவினர் இப்படத்தை வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.