அஜித்துடன் ‘அமர்க்களம்’ படத்தில் நடிக்க ஷாலினி மறுத்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிகை ஷாலினியை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளான திகழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் அஜித்துடன் நடிக்க ஷாலினி மறுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ”அமர்க்களம்” படத்தில் முதலில் ஷாலினி நடிப்பதை நிராகரித்தாராம். ஏனென்றால் அப்போது அவர் 12ம் வகுப்பு பரீட்சை எழுதுவதற்காக நிராகரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இயக்குனர் ஷாலினிக்காக காத்திருந்து இந்த படத்தை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.