நடிகை ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸில் பங்கேற்பாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. தற்போது இவர் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இப்போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் நடிகை ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் டிவியின் மற்றொரு பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்வார் என்று பேசப்பட்டு வருகிறது.
ஆனால் ஷகிலா ஏற்கனவே கன்னடத்தில் ஒளிபரப்பான பிக்பாஸில் பங்கேற்றுள்ளார். கன்னட பிக் பாஸ் வீட்டில் 26 நாட்கள் இருந்து அதன்பின் அவர் வெளியேற்றப்பட்டார். ஆகையால் நடிகை சகிலா மீண்டும் தமிழ் பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது.