பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் நிலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் அக்ஷய்குமார், ரன்வீர் கபூர், சுந்தர் சி, கௌரி கிஷன், நிவேதா தாமஸ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் சிலர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ‘பதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.படப்பிடிப்பில் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதை அறிந்த ஷாருக்கான் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அதனால் ஷாருக்கான் தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.